திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் டோமனிக் (28). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு டோமனிக் வந்துள்ளார்.
அப்போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் முன்பு பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ரயில் முன் பாய்ந்து ரேவந்த் டோமனிக் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.