ஸ்ரீ பெரும்புதூர்:ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த தத்தனூர் கிராமம், இயேசுநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்(32). இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், ஜேம்ஸ் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டில் உள்ள தனி அறையில் தூங்க சென்றார். மறுநாள் காலை நீண்டநேரமாகியும் ஜேம்ஸ் வெளியே வராததால் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜேம்ஸ் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஜேம்ஸை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
0
previous post