திண்டுக்கல்: நத்தம் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (30). அரசியல் பிரமுகர். கடந்த 17ம் தேதி ராஜாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எண்ணி அவரது நண்பர்கள் கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை ராஜா, பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்வினை அவரது நண்பர்கள் வீடியோ செய்து ரீல்ஸாக பதிவு செய்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையறிந்த நத்தம் போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.