வொர்செஸ்டர்: இங்கிலாந்து சென்றுள்ள, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய இளைஞர் கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. வொர்செஸ்டர் நகரில் நேற்று முன்தினம் நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியின், வைபவ் சூர்யவன்ஷியின் (14), 78 பந்துகளில் 143 ரன் (10 சிக்சர், 13 பவுண்டரி) குவித்தார். 50 ஓவரில் இந்தியா, 9 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 308 ரன்னுக்கு ஆல் அவுட்டானதால், இந்தியா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் அதிவேக சதம் விளாசி, இளையோர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். இளையோருக்கான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானின் கம்ரம் குலாம் 53 பந்துகளில் சதம் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.
இளையோர் ஒரு நாள் போட்டி; நம்பர் 1 வைபவ்; 52 பந்துகளில் 100
0