Tuesday, April 16, 2024
Home » இளைஞர்களுக்கு அநீதி இழைக்கும் அக்னிபாதை திட்டம் ரத்து செய்வோம்: காங்கிரஸ் வாக்குறுதி

இளைஞர்களுக்கு அநீதி இழைக்கும் அக்னிபாதை திட்டம் ரத்து செய்வோம்: காங்கிரஸ் வாக்குறுதி

by MuthuKumar

ராணுவத்தில் 4 ஆண்டுகள் சேவை செய்யும் வகையில் அக்னிபாதை எனும் புதிய ஆள்சேர்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2022ல் அமல்படுத்தியது.

இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019 மற்றும் 2022க்கு இடைப்பட்ட சமயத்தில் இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, பின்னர் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள இளைஞர்களை சமீபத்தில் சந்தித்தேன். அவர்கள் கடுமையான மன மற்றும் உடல் தேர்வுகள் மற்றும் எழுத்துத் தேர்வில் கடுமையான சவால்களைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தங்கள் கனவு நிறைவேறி விட்டதாக நம்பி இருந்தவர்களுக்கு இதுவரை ராணுவத்தில் சேர்வதற்கான நியமன கடிதம் அனுப்பப்படவில்லை. பழைய ஆள்சேர்ப்பு முறையை கைவிட்டு அக்னிபாதை திட்டம் கொண்டு வரப்பட்டதால் 2 லட்சம் இளைஞர்களின் கனவுகள் சிதைந்தன. ஒன்றிய அரசின் இந்த முடிவு இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

மேலும், 50 லட்சம் விண்ணப்பதாரர்களிடம் தலா ₹250 என ₹125 கோடி வசூலித்த கட்டணத்தையும் அரசு திருப்பி தரவில்லை. அக்னிபாதை திட்டத்தால விரக்தி அடைந்த பலரும் தற்கொலை முடிவுக்கும் சென்றுள்ளனர். இந்த திட்டத்தில் எல்லோரும் அறிந்த பல சிக்கல்கள் உள்ளன. முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானேவும், அக்னி பாதை திட்டத்தால் ஆச்சரியமடைந்ததாக கூறி உள்ளார். இத்திட்டம் ஒரே மாதிரியான சேவைக்கு இரு விதமான ஊதியம், சலுகை, வாய்ப்புகளை வழங்கி பாரபட்சமாக செயல்படுகிறது. எனவே நம் இளைஞர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கார்கேவின் கடிதத்தை டிவிட்டரில் டேக் செய்துள்ள ராகுல், ‘‘வீரமும் தேசபக்தியும் கொண்ட ராணுவத்தில் சேரத்துடிக்கும் இளைஞர்களின் நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் துணை இருக்கிறோம்’’ என கூறி உள்ளார். மேலும் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறை கொண்டு வரப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.

You may also like

Leave a Comment

9 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi