சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல் நிலையத்தில் விசாரணையின் போது இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் விசாரித்துவருகிறார். கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் அடுத்துள்ள பயணியர் மாளிகையில் 3 நாட்களாக விசாரணை நடத்திவருகிறார். கோயில் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 4-வது நாளாக திருப்புவனம் காவல் ந்லையத்தில் விசாரணை நடத்திவருகிறார்.
திருப்புவனம் காவல்நிலையத்தில் நிகிதா யாரிடம் புகார் கொடுத்தார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதனை அடுத்து திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 50 போலீசாரும் வரவழைக்கப்பட்டு சாதாரண உடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி காவல் நிலையத்தில் ஆய்வு முடித்த பிறகு அனைவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தவுள்ளார்.
மேலும் உயர்நீதிமன்றம் வரும் 8-ம் தேதிக்குள் விசாரணை நடத்திமுடித்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு பிறபித்துள்ளது.