அகமதாபாத்: நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வீடுதோறும் மூவர்ண கொடி இயக்கத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடைய குடிமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.