மதுரை: திருப்புவனம் லாக்அப் மரணம் தொடர்பான கேள்விகளுக்கு டிஜிபி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் மரண வழக்கு ஐகோர்ட் கிளையில் விசாரணை வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் வழக்கு பதியவில்லை? என்றும் நகை காணாமல்போனது குறித்து எப்போதும் வழக்குப் பதியப்பட்டது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புகார் அளித்ததும் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டது; ஜூன் 28ல் வழக்குப் பதியப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.