மதுரை: இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி நீதி விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நீதி விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிருகத்தனமாக தாக்கப்பட்டு அஜித் இறந்துள்ளார் என்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரிகிறது. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்கள் என நீதிமன்றம் கருதுகிறது. காவல் நிலையம், கோயில் என வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளும் பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி நீதி விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!!
0