கரூர், ஆக. 28: இளைஞர்கள் உயர்ந்த இலக்கை அடைய படிப்படியாக முயற்சிக்க வேண்டும் என, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர், தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 152 நிறுவனங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி துணை மேயர் சரவணன், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.