மாட்ரிட்: ஸ்பெயினின் ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். தியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆன்ட்ரூ சில்வா இருவரும் தங்களது சொகுசு லம்போர்கினி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றபோது, இவர்களின் காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாலையில் இருந்து பல அடி தூரம் உருண்ட இவர்களது கார் பின்னர் தீப்பிடித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் வந்தும் இவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதில், சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இங்கிலாந்தின் லிவர்புல் அணிக்காக கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா விளையாடி வந்தார். சர்வதேச அளவிலான 50 கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் டியாகோ ஜோடாவுக்கு திருமணம் நடந்தது. ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.