சென்னை: தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க மின்னகம் அழைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இவை தவிர சமூக வலைத்தளமான டிவிட்டர், பேஸ்புக் போன்றவைகளிலும் பொதுமக்கள் புகாரளிக்கும் வசதி உள்ளது. மேலும் இதன் வாயிலாக அளிக்கப்படும் புகாரளிக்க உடனடியாக பதிலும், குறைந்தபட்ச கால அளவிலேயே குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் புகாரளிக்க பிரத்யேகமான இணையதளத்தை மின் வாரியம் தொடங்கியுள்ளது. https://ccms.tangedco.org/tangedco-public/ என்ற இணையதளம் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம். மேலும் மின் கட்டணம் செலுத்த எங்கு இருந்தாலும் 24/7 மணி நேரம் எப்போதும், எந்நேரமும் செயலி மற்றும் இணையதள சேவைகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.