லக்னோ: உபி பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்கள் நடைபெற்ற மகாகும்பமேளா பற்றி சட்டப்பேரவையில் முதல்வர் யோகி பேசும்போது ஒரு படகோட்டி குடும்பம் 130 படகுகள் மூலம் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருந்தார். பிண்ட்டு மெஹ்ரா எனும் அந்த படகோட்டி குடும்பம், பிரயாக்ராஜ் நகரில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பதிவில்,’ மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி லாபம் சம்பாதித்த படகோட்டியின் குடும்பம் குற்றப் பின்னணி கொண்டது. இவரை முதல்வர் யோகி சட்டப்பேரவையில் பாராட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் உண்மைப் பின்னணி கண்டறியவேண்டும். இந்த படகோட்டி உண்மையிலேயே ரூ.30 கோடி ஈட்டினார் எனில் அதற்காக அவர் செலுத்திய ஜிஎஸ்டி தொகை எவ்வளவு? இந்த குற்றவாளி படகோட்டியுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவரை முதல்வர் பாராட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளால் உ.பி பாஜ ஆட்சியில் கிரிமினல்களுக்கு தைரியம் வளர்ந்து பெருகியுள்ளனர்’ என்றார்.
யோகி பாராட்டால் சர்ச்சை ரூ.30 கோடிக்கு படகோட்டி ஜிஎஸ்டி கட்டினாரா? அகிலேஷ் யாதவ் கேள்வி
0