Sunday, September 15, 2024
Home » ஆதித்ய குஜ யோகம்

ஆதித்ய குஜ யோகம்

by Porselvi

நவக்கிரகங்களின் ராஜாவாகிய ஆதித்யனும் சேனாதிபதியான குஜனும் இணைவால் ஏற்படும் பலன்கள் கொஞ்சம் மாறுதலானது. இவைகள் ராஜ கிரகங்கள் என்றாலும் சேரலாமா? என்ற ஒரு சந்தேகம்
எல்ேலாருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கும். உலகத்திற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் தனது ஆற்றலை வெப்பமாக கொடுக்கும் கொடை வள்ளல் சூரியன் என்று சொன்னால் அது கண்டிப்பாக மிகையில்லை. வேகமும் மூர்க்கமும் உடைய செவ்வாய் உடன் இணையும் போது வெப்பத்தன்மை அதிகரிக்கத்தான் செய்யும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

சூரியன் – செவ்வாய்
இணைவிற்கான அமைப்புகள்

சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தாலும் செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்தாலும் இதுவும் குறிப்பிட்ட வகை இணைவை குறிக்கிறது.
*1-ஆம் இடம் மற்றும் 7-ஆம் இடத்திலிருந்து சப்தமமாக பார்த்துக் கொண்டால், ஒரு வகை பலன்களை எதிரெதிராக கொண்டுள்ளது.
*ஒரே ராசிக்கட்டத்தில் இணைந்து குறைந்த பாகைக்குள் இருப்பது.
*இரண்டு கிரகங்களும் பரிவர்த்தனை கொள்வது. இது கிட்டத்தட்ட இணைவிற்கான பலனாக இருக்கும்.ஒவ்வொரு வகையான கிரக இணைவும் அந்தந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு வகையான பலன்களை கொடுத்துக் கொண்டேஇருக்கும்.
*சூரியன் – செவ்வாய் திரிகோணம் என சொல்லக்கூடிய 1-ஆம் இடம், 5-ஆம் இடம், 9-ஆம் இடத்திலிருந்து இணைவை கொண்டிருக்கும்.
* சூரியன் அதிபதியான சிம்ம ராசியில் செவ்வாய் இருந்தாலும் இணைவாக கொள்ளலாம்.
*செவ்வாய் அதிபதியான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சூரியன் இருந்தாலும் இணைவாக கொள்ளலாம்.

சூரியன் – செவ்வாய் உறவு

இரண்டு கிரகங்கள் இணைவுகளின் உறவைப் பொருத்தே மற்ற பலன்கள் உண்டாகும். இந்த இரண்டு கிரகங்களும் நட்பாக உள்ளது. நட்பான கிரகங்கள் இணைந்து கேந்திரங்களில் இருந்தால் அதிக வலிமை பெற்று உச்சபட்ச பலன்களை தரும். இவ்விரண்டு கிரகங்களும் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்தில் இருப்பது ஓரளவு சுபமாக கொள்ளலாம்.ெநருப்பு ராசிகளில் இருந்தால் மிகுந்த வலிமையாக இருக்கும். செயல்பாடும் மிகவும் வலிமையாக இருக்கும்.

சூரியன் – செவ்வாய்
இணைவில் பலன்கள்

*எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த படிப்புகளில் ஆர்வம் ஏற்படும். சிலருக்கு எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் காண்ட்ராக்ட் போன்ற பணிகள் ஏற்படும்.
*இந்த அமைப்புகள் அல்லது சேர்க்கை ஏற்படும் போது சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதுண்டு.
*சூரியன் – செவ்வாய் இணைந்த நபர்களின் உடல் எப்பொழுதும் உஷ்ண சரீரத்தை கொண்டுள்ளனர். வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நலம் தரும்.
*இவர்களின் மிகப்பெரிய வெற்றி, இயங்கிக் கொண்டே இருப்பதுதான். அதிக எனர்ஜியாக இருப்பார்கள்.
*இவர்களுக்கு கௌரவமாக வாழும் அமைப்பு இருக்கும்.
*இந்த இணைவு உள்ளவர்கள் ராணுவத்துறையில் இருந்தால் மிகுந்த உயர்பதவியை பெறும் அமைப்பு உண்டாகும்.
*இவர்கள் ஒரே இடத்தில் வேலை செய்ய மாட்டார்கள். மாறிக்கொண்டே இருப்பார்கள். யாராவது தனியார் துறையில் இருப்பவர்கள் பெரிய சம்பளம் என்றவுடன் இருக்கின்ற வேலையை விட்டுவிட்டு மற்றொரு இடத்திற்கு சென்றுவிடுவார்கள். இந்த இணைவு 10-ஆம் பாவத்தில் இருந்தால் கண்டிப்பாக பல இடங்களில் பணியாற்றி இருப்பார்கள் என்பதை உறுதியாக சொல்லலாம். அரசாங்கத்தில் பணியாற்றுபவராக இருந்தால், வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

*இவர்கள் முட்டையை விரும்பி உண்ணும் நபர்களாக இருப்பார்கள். ஜீரண சக்தி இவர்களுக்கு மிகுதியாக இருக்கும். ஆதலால், குறிப்பிட்ட மணிக்கு இவர்களுக்கு பசி எடுத்துக் கொண்டே இருக்கும். வயிற்றில் ஜீரணம் செய்யக்கூடிய திரவங்கள் மிகுதியாக சுரப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடும்.
*சூரியன் – செவ்வாய் இந்த கிரகங்களை குரு பார்வை செய்தால் இவர்களின் வாழ்வு பதவி ஏற்றத்துடன் இருக்கும். மேலும், இந்த கிரகங்கள் தொடர்பான காரகங்கள் நல்ல அமைப்பைபெற்றிருக்கும்.
*சிலருக்கு மட்டும் வாழ்வில் ஏற்றம் இறக்கத்துடன் இருக்கும். இந்த கிரகங்களுடன் அசுப கிரகங்கள் தொடர்பில் இருந்தால், அரசு மற்றும் அரசியல் தொடர்புகள் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். தவிர்க்க முடியாது.
*மிக நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குஇருக்கும்.
*மிகவும் துரிதமாக செயல்படும் அமைப்பு இவர்களுக்கு உண்டு. மற்றவர்களும் அதேபோல இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு.
*இந்த இரு கிரகங்களும் இணைகின்ற அல்லது பார்த்துக் கொள்ளும் பட்சத்தில் மின்சாரம் தொடர்பான பழுதுகள் மற்றும் மின்சாரம் வேலைகள் அதிகமாக இருக்கும்.
*எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறைகளில் வல்லுநராக இருப்பார்.

உலகியல் ஜோதிடத்தில் (Mundane Astrology)

*சூரியன் – செவ்வாய் இணைவுள்ள இடத்திற்கு அருகில் கட்டாயம் மருத்துவமனை, அரசாங்க மருத்துவமனை, மருந்தகம் இருக்கும்.
*எலெக்ட்ரிக் டிரான்ஸ்பார்ம் ஸ்டேஷன், டிரான்ஸ்பார்ம் ப்ளாண்ட் ஆகியவைகள் இருக்கும். நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஸ்டேஷன் அருகில் இருக்கும். காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஸ்டேஷன் அருகில் இருக்கும்.இந்த இடங்கள் ராசிகளை பொருத்து மாறுபடும்.
*பறவைகள் அல்லது கோழிகள் வளர்க்கும் மிகப்பெரிய பண்ணைகள் (Poultry Farm) இருக்கும். முட்டை விற்பனை செய்யும் மையங்கள் இருக்கும்.
*விண்ணில் ஏவப்படும் ராக்கெட் தளங்களும் இந்த கிரக இணைவுகளுக்குள் உட்படும். இந்த இடம் நீர், காற்று, வெப்பம் தொடர்பான இடங்களாக இருக்கும்.
*காவல் நிலையங்கள், ராணுவ தளவாட இடங்கள் அல்லது ராணுவ பயிற்சி மையங்கள் போன்றவை இந்தஇடங்களுக்குள் உட்படும்.

சூரியன் – செவ்வாய்
இணைவிற்கான பரிகாரங்கள்

*வைத்தீஸ்வரன் கோயில் சென்று ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமை களில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து கொள்வது சிறந்த பலனைத் தரும்.
* பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் வலம் வருவதும் சிறந்த பலனைத் தரும்.
vசென்னையில் மருந்தீஸ்வரரை வழிபடலாம். ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவது சிறப்பைத் தரும்.
* கோதுமை மற்றும் துவரையில் செய்த உணவுகளை தானம் செய்வதும் சிறந்த பரிகாரங்களாக அமையும்.
*ஆரஞ்ச் வண்ணம் கொண்ட தாள்களை நெருப்பில் எரித்தும் பரிகாரமாக செய்யலாம்.

You may also like

Leave a Comment

15 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi