யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், புதிய, மேம்படுத்தப்பட்ட அட்வஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 29.6 எச்பி பவரையும், 29.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. புதிய அம்சமாக டிவின் எல்டிடி ஹெட்லைட் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர, டிராக்ஷன் கண்ட்ரோல், 3 ஏபிஎஸ் மோட்கள், புளூடூத் இணைப்பு வசதி கொண்ட கன்சோல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் விலை சுமார் ரூ.2.27 லட்சம்.