சென்னை: ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்காடு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது ,”என்று கூறினார்.