யமஹா நிறுவனம், டெனரே 700 எக்ஸ்ட்ரீம் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிளாக அறிமுகம் ஆகியுள்ள இது, சர்வதேச சந்தைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. முன்புற மற்றும் பின்புற வீல்களில் கூடுதலாக 20 மி.மீ சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சீட் உயரம் 910 மி.மீ ஆகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 260 மி.மீ ஆகவும் உள்ளது.
ஒன்றை சீட், அலுமினியம் ரேடியேட்டர் புரோடக்டர், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த மோட்டார் சைக்கிளில் 689 சிசி சிபி2 பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 72 எச்பி பவரையும், 68 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.