நியூயார்க்: எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என எலான் மஸ்க் சந்தேகம் தெரிவித் துள்ளார். எக்ஸ் தளம் (டிவிட்டர்) நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில்,’ எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் உள்ளது’ என்றார்.