சென்னை: அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல்களுக்கு 30 முதல் 50 சதவிகித தள்ளுபடியில் நூல் விற்பனை செய்யப்படுகிறது. இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன உள்ளன. நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தரமணியில் உள்ள நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். மேலும் எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும். நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொண்டு ஆன்லைன் மூலமாகவும் நூல்களை வாங்கிக்கொள்ளலாம்.