சென்னை: தமிழக அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 2023-24ம் கல்வியாண்டிற்கான இந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாணவர்கள் நலன் கருதி 22.9.2023 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மேற்கண்ட படிப்புகளில் பயில விரும்புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் இறுதியாக படித்த கல்வி சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் அளிக்க வேண்டும். மேலும் தகவல்பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.