சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் செயல்பாட்டின் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று மாநிலம் முழுவதும் 1077 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அவ்வலுவலக கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அலுவலகங்களின் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று 1,077 அரசு அலுவலகங்களில் சுத்தம் செய்து கழிவு சேகரிப்பு: அரசு தகவல்
0