அஜர்பைஜான்: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்ஸன் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற கடைசி வரை போராடி வெற்றி வாய்ப்பை பிரக்ஞானந்தா இழந்தார். கிளாசிக் சுற்றுகள் டிராவான நிலையில் நடைபெற்ற டை பிரேக்கர் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். சற்று நேரத்திற்குப் பின் டை பிரேக்கரின் இரண்டாவது சுற்று போட்டி தொடங்கும்.