Friday, February 23, 2024
Home » உலக வங்கி உதவியுடன் கடலோர மறுசீரமைப்புக்காக ரூ.1,675 கோடி செலவில் பணிகள்: அரசாணை வெளியீடு

உலக வங்கி உதவியுடன் கடலோர மறுசீரமைப்புக்காக ரூ.1,675 கோடி செலவில் பணிகள்: அரசாணை வெளியீடு

by Karthik Yash

சென்னை: உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை ரூ.1,675 கோடியில் செலவில் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 2023-24 பட்ஜெட் உரையில், கடல் அரிப்பை தடுப்பது, கடல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் கடல் பல்லுயிரியலை பாதுகாப்பது ஆகிய நோக்கங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள், நீலப் பொருளாதார திட்டமானது கடலோர வளங்களை பன்முகப்படுத்துவதன் மூலம் மீள்தன்மை மற்றும் நிலையான பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதோடு, இத்திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்துதல், கடல் பல்லுயிர்கள் பாதுகாப்பு, உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi