டெல்லி: உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம் என ஜி20 நாடாளுமன்ற தலைவர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம்; ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டிய நேரம். மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது; பிளவுபட்ட உலகம் சவாலுக்கு தீர்வைக் கொடுக்காது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.