பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே உலக மனநல தின விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ‘ஆல் தி சில்ரன்’ அறக்கட்டளை சார்பில் உலக மனநல தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பொற்தாமரை தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனநல மருத்துவர் அமிர்தா, சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் மன உறுதியை மீட்டெடுப்பது தொடர்பாக மாணவிகளுக்கு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி நன்றி கூறினார்.