Friday, March 1, 2024
Home » உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்த கொரோனாவை விட 7 மடங்கு ஆபத்தான ‘எக்ஸ்’ வைரஸ் வருது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்த கொரோனாவை விட 7 மடங்கு ஆபத்தான ‘எக்ஸ்’ வைரஸ் வருது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

by Mahaprabhu

லண்டன்: உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்த கொரோனா வைரசை காட்டிலும் 7 மடங்கு ஆபத்தான வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்தது. இந்த தொற்றுநோயால் உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசை காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க புதிய வைரஸ் ெதாற்று வரும் என்றும், அந்த வைரஸ் கொரோனாவை காட்டிலும் ஏழு மடங்கு ஆபத்தானது என்றும், புதிய தொற்றுநோயால் சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடும் என்றும், கடந்த 1918-1920ம் ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய ‘ஸ்பானிஷ்’ காய்ச்சலைப் போலவே ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதியவகை வைரசுக்கு ‘எக்ஸ்’ வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் கூறுகையில், ‘விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வகை வைரஸ்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘எக்ஸ்’ என்ற வைரஸ் பரவினால் குறைந்தது 5 கோடி மக்களை கொல்லக் கூடியதாக இருக்கும்.

இந்த தொற்றுநோயை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும். கொரோனா வைரஸை விட 7 மடங்கு ஆபத்தானது. எக்ஸ் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னதாக, அதை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 25 வகையான வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

You may also like

Leave a Comment

2 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi