நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) அணியும், ஜெர்மனை சேர்ந்த பேயர்ன் மியுனிச் அணியும் மோதின. இப்போட்டியில் அற்புதமாக சுழன்றாடிய பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த கடைசி காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியும், ஜெர்மனை சேர்ந்த டார்ட்மண்ட் அணியும் மோதின.
போட்டியின் முடிவில், ரியல் மாட்ரிட் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 9ம் தேதி நடக்கும் அரை இறுதிப் போட்டியில் ஃப்ளுமினென்ஸ் – செல்ஸீ அணிகள் மோதவுள்ளன. வரும் 10ம் தேதி நடக்கும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி – ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.