சென்னை: உலக வங்கியின் உடனான வணிக உறவு பல நட்புகளை கொடுத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தபின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 20 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கி பங்கு உள்ளது. சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2023ன் கணக்குப்படி தமிழ்நாட்டில் 63 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிக்கின்றனர். தமிழ்நாடு நீர்வளம், நிலவளம் திட்டம் நவீனமயமாக்கலுக்கு வித்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு உலக வங்கிகள் நிதி அளித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உலக வங்கியின் உடனான வணிக உறவு பல நட்புகளை கொடுத்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
0