புதுடெல்லி: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து ஆன்லைனில் புகார் அளிக்க கடந்த 2017ல் தொடங்கப்பட்ட Shebox.nic.in என்ற இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி நேற்று தொடங்கி வைத்தார்.இதில் பெண் ஊழியர்கள் புகார்களை பதிவு செய்து, அவற்றின் நிலையை கண்காணிக்கவும், தங்களின் குறைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும்.