திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்கள் 7 சதவீத கூலி உயர்வு வழங்காததால், பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, இந்த ஆண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர். இதனால் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு இன்று முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தி உள்ளனர். இந்தநிலையில் அதேவேளையில் 7 சதவீதம் கூலி உயர்வு கொடுக்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பது, டெலிவரி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் துவங்கி உள்ளனர், திருப்பூரில் 350-க்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.