சென்னை: தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் உத்தரவின்பேரில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தால் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்க வேண்டும். சென்னை, 2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையிலான குழுவினால் சென்னையில் மொத்தம் 210 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 170 நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.