Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

பெண்கள் வாழ்க்கையில் விடியல் பயணம் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சென்னை: பெண்கள் வாழ்க்கையில் விடியல் பயணம் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். "கிராமங்களில் வீதிகளில் முடங்கி கிடந்த பொதுமக்கள் போக்குவரத்தின் மூலம் வெளியே வந்து கல்வி கற்றார்கள். போக்குவரத்து துறை மூலம் தமிழகத்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. விடியல் பயணம் அறிவிக்கப்பட்ட 4 ஆண்டுகளில் இதுவரை 670 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் வாழ்க்கையில் விடியல் பயணம் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.1,200 சேமிப்பு வருகிறது என தனியார் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது" என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றினார்.