பெரம்பலூர், ஜூலை 26: மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை மற் றும் கலவரத்தை வேடிக் கை பார்க்கும் பாஜக அர சை கண்டித்து மேட்டுப் பா ளையம் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் தொடரும் பெ ண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைகள், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பாஜக மாநில, ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து பெர ம்பலூர் மாவட்டம், மேட்டுப் பாளையம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் முத்து லட்சுமி மற்றும் சரசு ஆகி யோர் தலைமையில் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர்ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.