வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் எவ்வித அனுமதியும் பெறாமல் கல்லூரிக்குள் திடீரென நுழைந்து அங்குள்ள கழிவறைகளை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் சீனிவாசன் வாலாஜா காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதி புகார் செய்தார். அதில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தூண்டுதலின் பேரில், அதிமுக நிர்வாகிகள் வீடியோ எடுத்ததாக கூறி உள்ளார். அதன்பேரில், அதிமுக மகளிர் அணி செயலாளர் ராதிகா உட்பட 22 பேர் மீது சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகளிர் கழிவறையை வீடியோ எடுத்த அதிமுக நிர்வாகிகள் 22 பேர் மீது வழக்கு
153