சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.