சென்னை: மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வயது ஏதுமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம்ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு 1,000 கிடையாது. 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.