சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றை போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றுதான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்” அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் தினம்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி
0