சென்னை: உரிமைத் தொகை கோரி மகளிர் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வருவது பொய்யான தகவல். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி பெண்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.