சென்னை: அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி மகளிர் பயன்பெறுவர் என முதல்வர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பார்த்தால் சில லட்சம் மகளிர் மட்டுமே பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமை தொகை அறிவித்ததற்கு ஏற்ப அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.