கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விளக்கை அணைத்து விட்டு தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.கொல்கத்தா மக்கள் 9 மணிக்கு தங்களது வீட்டு விளக்குகளை அணைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.அதோடு இருட்டில் தீப்பந்தம் ஏந்தி தெருக்களில் வந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் மனித சங்கிலி அமைத்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தங்களது முகத்தை மட்டும் காட்டியபடி இப்போராட்டத்தில் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மின் விளக்குகள் எரியவிடப்பட்டது.