பெங்களூர்: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன், விரிந்தா தினேஷ் 33 ரன் எடுத்தனர். மும்பை சார்பில் நாட்-சீவர் பிராண்ட் 3 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
யஸ்திகா பாட்டியா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஹைலே மேத்யூஸ், நாட்-சீவர் ப்ரண்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். ஹைலே மேத்யூஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் நட் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார். இறுதியில், மும்பை அணி 17 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இன்று இரவு ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.