ஜல்காவ்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜல்காவில் நடந்த விழாவில் அமைச்சரும், சிவசேனா மூத்த தலைவருமான குலாப் ராவ் பாட்டீல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘பெண்களுக்காக எம்எஸ்ஆர்டிசி பஸ் கட்டணங்களை பாதியாகக் குறைத்துள்ளோம். லட்கி பாகின் திட்டம் மற்றும் பெண்களுக்கான இலவச கல்வி உள்ளிட்ட பெண்கள் அதிகாரமளிப்புக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பெண்கள் அதிகாரமளித்தல் பற்றி நாம் பேசினாலும், இன்று மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. பால் தாக்கரேவின் எண்ணங்களால் நாம் ஈர்க்கப்பட்டபோது, பெண்கள் லிப்ஸ்டிக்குடன் மிளகாய்ப் பொடியையும், ராம்புரி கத்தியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதற்காக பத்திரிகையாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இன்றைய நிலைமையும் அதேதான். இன்றைய இளம் பெண்களிடம் சுய பாதுகாப்புக்காக நான் இதுபோன்ற பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் என கூறுவேன்’’ என்று தெரிவித்தார்.