புதுடெல்லி: மகாராஷ்ரா மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, “ பெண்களை மதிப்பது இந்திய கலாச்சாரத்தின் ஓர் அங்கம். இந்திய அரசு நடத்திய ஆய்வின்படி பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர்களில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண் பணியாளர்களின் பங்களிப்பு அதிகமாகி உள்ளது.
பெண்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களின் கனவுகளை நிறைவேற்ற ஆண்கள் உதவ வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் பல தடைகளை கடந்து தன் இலக்கை அடைய போராடுகிறாள். அந்த பெண்ணுக்கு உருவாக்கப்படும் தடைகள் நாட்டின் வளர்ச்சி வேகத்தை தடுக்கும். நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிர் லட்சாதிபதிகளாக உள்ளனர். பெண்களின் பொருளாதார அதிகாரம் நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்” என்றார்.