சென்னை: மகளிருக்கான உரிமை தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுமை குறையும் என தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் கடன் சுமையை குறைப்பதில் முதல்வர் மிகுந்த கவனம் செலுத்தி படிப்படியாக நிதிச் சுமையை குறைத்து தற்போது மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துவிட்டார்.
எது எப்படி இருந்தாலும் இன்றைக்கு அடித்தட்டு நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் அரிய திட்டம் ஒரு முன்மாதிரி திட்டமாகும். இதன் மூலம் பெண்களின் பொருளாதார சுமை குறைக்கப்பட்டு, குடும்ப நிலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு பொன்குமார் கூறினார்.