Monday, June 16, 2025
Home செய்திகள் மகளிர் ஆசிய கோப்பை டி20 அரபு அமீரகத்தை வீழ்த்தியது நேபாளம்: சம்ஜனா அதிரடி

மகளிர் ஆசிய கோப்பை டி20 அரபு அமீரகத்தை வீழ்த்தியது நேபாளம்: சம்ஜனா அதிரடி

by Ranjith

தம்புல்லா: இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில், நேபாளம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரங்கிரி தம்புல்லா சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நேபாளம் முதலில் பந்துவீசியது. ஐக்கிய அரபு அமீரக வீராங்கனைகள் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறியதை அடுத்து, அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது.

அதிகபட்சமாக குஷி ஷர்மா 36 ரன் எடுத்தார். கவிஷா 22, சமைரா 13, கேப்டன் ஈஷா 10 ரன் எடுத்தனர். 3 பேர் ரன் அவுட்டானது அமீரக அணிக்கு பின்னடைவை கொடுத்தது. நேபாளம் பந்துவீச்சில் இந்து பர்மா 3, சப்னம், கிரித்திகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நேபாளம் அணி, தொடக்க வீராங்கனை சம்ஜனா கட்கா அதிரடி ஆட்டத்தால் 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சம்ஜனா கட்கா 72 ரன் (45 பந்து, 11 பவுண்டரி), பூஜா மஹதோ 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். யுஏஇ பந்துவீச்சில் கவிஷா 3, லாவன்யா 1 விக்கெட் வீழ்த்தினர். சம்ஜனா கட்கா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். நேபாளம் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi