அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் ஜே.ஜே. நகரில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தங்கியிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரித்தனர்.
இதில், உகாண்டா நாட்டை சேர்ந்த எல்லிண்டினா (35) மற்றும் நஹன் வஹி ஐசா (32) என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரும் விசா காலம் முடிந்தும் நீண்ட காலமாக ஆவணமின்றி தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் அவிநாசி போலீசார் கைது செய்தனர்.