ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக வரும் 26ம் தேதி துவங்கி ஆக.4ம் தேதி வரை நடக்கும் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஊட்டி வட்டம் – ஆடாசோலை, முத்தொரை, அம்மனட்டி, நஞ்சநாடு, கல்லக்கொரை, பைகமந்து, வெல்பெக் அண்ணாநகர், எம்.பாலாடா, அப்புகோடு, கப்பத்தொரை, எல்லக்கண்டி, சின்கோனா, குழிச்சோலை, இந்துநகர் எச்பிஎப், கெங்கமுடி, எப்பநாடு, இடுஹட்டி, மொரக்குட்டி, அகலார், குருத்துகுளி, கவர்னர்ேசாலை, பார்சன்ஸ்வேலி, மேல்கவ்வட்டி, கீழ்கவ்வட்டி. குன்னூர் வட்டம் – கரன்சி, கோடமலை, பர்லியார், கம்பிசோலை, பேரட்டி, பாரத்நகர், அம்பிகாபுரம், கரிமரஹட்டி, கார்டைட் கூட்டுறவு பேக்டரி, சிங்காரா எஸ்டேட், நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆடர்லி எஸ்டேட். கோத்தகிரி வட்டம் – பர்ன்சைடு, கொணவக்கரை, ஆடுபெட்டு, கொட்டக்கொம்பை, பெத்தளா, குஞ்சப்பணை, கோழிக்கரை, வார்விக் எஸ்டேட், ஆவுக்கல், கூட்டாடா எஸ்டேட், குண்டாடா, செம்மனாரை, கெங்கரை, மகளிர் ஹிட்டக்கல், பையங்கி.
குந்தா வட்டம் – பேலிதளா, எமரால்டு கடை – 2, தேவர்சோலை, கன்னேரிமந்தனை, கீளூர், நுந்தளாமட்டம், மீக்கேரி, பாலகொலா, துளிதலை, பி.மணியட்டி, நுந்தளா, பெம்பட்டி, புதுஹட்டி, இத்தலார், தங்காடு, டி.ஒரநள்ளி. பந்தலூர் வட்டம் – சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி-1, கொளப்பள்ளி-2, சேரங்கோடு செக்போஸ்ட், வென்ட்ெவார்த், கொளப்பள்ளி (மகளிர்), சேரங்கோடு, சேரம்பாடி பஜார், சேரம்பாடி சுங்கம், கச்சிச்சால், எருமாடு, கையுன்னி, அய்யன்கொல்லி, குறிஞ்சிநகர், பஞ்சக்கொல்லி, வெட்டுவாடி, கொளப்பள்ளி (பிஏசிபி), போத்துகொல்லி, பனஞ்சரா ஆகிய கிராம ரேஷன் கடை பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.
ஊட்டி நகராட்சி – ஹாஸ்பிட்டல் ரோடு, காந்தல் பஜார், காமதேனு மிஷினரிஹில், நியு மார்க்கெட், பாம்பேகேசில், அப்பர் பஜார், கார்டன் சாலை, கீரின்பீல்டு, ஆர்கே., புரம், மேரிஸ்ஹில், சூப்பர் மார்க்கெட் 1 மற்றும் 2, நொண்டிமேடு, மார்கெட் போஸ்ட் 1,2, முள்ளிக்கொரை, மெயின் பஜார் – 1 காந்தல் 1,2, பிங்கர்போஸ்ட் 1,2, கோடப்பமந்து, பர்ன்ஹில், லவ்டேல் -1, மஞ்சனக்கொரை, ஹெட் போஸ்ட் ஆபிஸ் கேம்பஸ், ரோஸ்மவுண்ட்.
தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை – 1,2,3, புதுமந்து, தலையாட்டிமந்து, பட்பயர், காந்தல், குன்னூர் நகராட்சி – அப்பர் குன்னூர், உமரி காட்டேஜ், டென்ட்ஹில், காந்திபுரம், கேஷ்பஜார், மினி சூப்பர் மார்க்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூர் ஓல்டு, அப்பர் குன்னூர் நியூ, சந்திரா காலனி, ஓட்டுபட்டறை, வசம்பள்ளம், ரெயில்வே கூட்டுறவு பண்டக சாலை, ஆர்வார்பேட்டை, வேல் மகளிர் சுய உதவிக்குழு கிருஷ்ணாபுரம்.
கூடலூர் நகராட்சி – துப்புக்குட்டி பேட்டை, சுங்கம் (மகளிர்), செவிடிபேட்டை, அப்பர் கூடலூர், அத்திபாலி, அல்லூர், தொரப்பள்ளி, 1வது மைல், நடு கூடலூர், 2வது மைல், ராஜகோபாலாபுரம் -1,2, வண்டிபேட்டை, மார்த்தோமா நகர், நந்தட்டி, சளிவயல், கோழிப்பாலம், காசிம்வயல், புத்தூர்வயல், செம்பாலா. நெல்லியாளம் நகராட்சி – பந்தலூர், கூவமூலா ஆகிய ரேசன் கடை பகுதிகளில் நடைபெறும்.
குன்னூர் வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகள் – சிங்காரா தோப்பு, பெல்லட்டிமட்டம், வண்டிசோலை, வெலிங்டன், ஜெயந்திநகர், கோபாலபுரம் – 1,2, சட்டன் எஸ்டேட், காட்டேரி டேம், பிக்கோல், அதிகரட்டி, முட்டிநாடு, கொல்லிமலை, கோடேரி, கூர்காகேம்ப் மகளிர் சுயஉதவிக்குழு. கோத்தகிரி வட்ட பேரூராட்சி பகுதிகள் – டானிங்டன், அம்பேத்கர் நகர், கட்டபெட்டு-1,2, பெட்டட்டி, தலைமையகம், லோயர் பஜார், அப்பர் கோத்தகிரி, கன்னேரிமுக்கு, திம்பட்டி, கிருஷ்ணாபுதூர், வெஸ்ட்புரூக், மார்க்கெட், கேர்பெட்டா எஸ்டேட், நெக்கிகம்பை, அன்னை மகளிர். அதிகரட்டி பேரூராட்சி – தாம்பட்டி.
கூடலூர் வட்ட பேரூராட்சி பகுதிகள் – தேவர்சோலை-1,2, தேவன், நம்பர் 3 டிவிஷன், மேபீல்டு எஸ்டேட், செருமுள்ளி, புளியம்பாறை ஆகிய ரேஷன் கடை பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு நடைபெறும்.