சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு நவ.25-ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 11.85 லட்சம் பேர் முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.