பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் போலீஸ் உடையில் நின்றிருந்தார். அவர் மீது மற்ற போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
எனவே அவர்கள், அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரீத்தா (34) என்பதும், போலி பெண் போலீஸ் என்பதும் தெரியவந்தது. போலீஸ் வேலை மீதுள்ள ஆர்வத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிந்து ரீத்தாவை நேற்று கைது செய்தனர்.