ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர் பணி முடிந்து லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். விமான பெண் ஊழியர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் பெண் ஊழியரை தாக்கி உள்ளார். பெண் ஊழியரைத் தாக்கிய மர்ம நபரை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் பிடித்து லண்டன் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.